எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-------- சொல்லுதல் யார்க்கும் எளிய ----------------- பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தேன்....

-------- சொல்லுதல் யார்க்கும் எளிய -----------------
பத்திரிக்கை
படித்துக்கொண்டிருந்தேன்.
பட்டினி , பலாத்காரம் , போர்
சாவு எண்ணிக்கை
சரியாகத்தான் இருந்தது.

தனி ஒருவனுக்கு
உணவளிக்காத ஜகம்
அழியாமல்தான் சுழன்றது.

மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையும்
குளிர்விட்டுதான் கிடந்தது.

வெங்க்கொடுமை சாக்காட்டில்
விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
ஊழலரசியின் உருவப்படத்தை
தூக்கிக்கொண்டுதான் ஆடியது.

கடலில் தம்மை போடமாட்டார்கள்
என்ற அபார நம்பிக்கையோடு,
கட்டுமரமாய் மிதப்போமென
தமிழர்களை சிலர்
சிரிப்புமூட்டிக் கொண்டுதானிருந்தனர்.

நானும் உள்ளே வந்து
ஒரு காமெடி எழுதினேன்.!
கவிதை எனப் பெயரிட்டேன்.

நாள் : 8-Oct-14, 12:05 pm

மேலே