வணக்கமுங்க... முன்பு நான் இப்படி இல்லைங்க. இங்கு வந்த...
வணக்கமுங்க...
முன்பு நான் இப்படி இல்லைங்க. இங்கு வந்த பிறகு எல்லாமே மாறிப்போன மாதிரி இருக்குங்க. நின்னா, நடந்தா, படுத்தா, மூச்சி விட்டா கூட க..... வி...... தை..... யாதான் வருது (தோஸ்துங்க சொல்றாங்க). அது கவிதை மாதிரி இல்லாட்டியும் கிறுக்க தோணுது, நான் என்ன செய்யறதுங்க . உங்க தலைவிதி படிச்சுதான் ஆகணும்...
(நாண்பன் காளிக்கு திருமண நிச்சயம் நடந்தது, அன்று நான் கிறுக்கி கொடுத்தது, இன்று உங்கள் பார்வைக்கு)
காளிக்கு நிச்சயம் - ப்ரியன்
நகைப்பு மாறா
உன் முகத்தால்
நன்மை மலர்ந்திடுமே !!!
மறியாதை தரும்
உன் விளிப்பால்
மனங்கள் குளிர்ந்திடுமே !!!
தெரியாது என வந்தால்
உன் இடம்
தெளிந்திடும் சந்தேகமே !!!
நட்புகள் யாவரிடமும்
உன் அன்பால்
நம்ம அண்ணா ஆகிடுவே !!!
உதவியென கேட்டுவந்தா
உன் துணிவால்
உயிரையும் கொடுத்திடுவே !!!
வேலையினை கொடுத்திட்டா
உன் அர்ப்பணிப்பால்
வேங்கையென செய்திடுவே !!!
பசியெனகேட்டாலே பிடித்த
உன் பிரியாணியும்
பகிர்ந்துண்டு சாப்பிடுவே !!!
நல்லமனம் கொண்ட
உனக்கு நேற்று
நடந்திருக்கு நிச்சயமே !!!
சொந்தமதை கரம்பிடிக்க
உன் வாழ்வில்
சொர்கமது கிட்டிடுமே!!!