வைரம் அம்மா! குப்பையை மட்கிய குப்பையென்றும் மட்காத குப்பையென்றும்...
வைரம்
அம்மா!
குப்பையை மட்கிய குப்பையென்றும்
மட்காத குப்பையென்றும்
பிரிப்பதற்கு முன்பே
என்னைக் குப்பைத்தொட்டியில்
போட்டுவிட்டாய்!
இல்லையென்றால் குழம்பியிருப்பாய்
எதில் போடுவதென்று
நான் உன்னால்
மட்கிய குப்பையாய் இருந்தாலும்,
மட்காத குப்பையாய்
இல்லையில்லை.....
ஒளிரும் வைரமாய்
உருவெடுத்திருக்கிறேன் இன்று!