எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நல்லவர்களை மட்டும் ஏன் கடவுள் சோதிக்கிறான் என்று அநேகம்...

நல்லவர்களை மட்டும் ஏன் கடவுள் சோதிக்கிறான் என்று அநேகம் பேர் புலம்புவதுண்டு அதன் காரணம் என்ன ?அறிந்ததுண்டா ?
இறை நம்பிக்கை கொண்டு நல்லவனாக வாழ்பவன் கடவுள் எப்போதும் தன்னை கைவிடமாட்டார் என்றும் அதே தருணத்தில் கடவுள் துணையாய் இருப்பதால் தனக்கு ஒருபோதும் துன்பம் நேராது என்று என்னும் எண்ணம் சிலநேரம் ஆணவமாக மாறும்போது அவன் திறமையை அவன் உணர்ந்துகொள்ளவும் .திறமையை வளர்த்துக்கொள்ளவும் கடவுள் வைக்கும் பரீட்சை ....சரி ...அப்ப கெட்டவங்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லையே ஏன் ?என்ற கேள்வி மனதில் எழுவது இயல்பு ....நல்லவர் படும் கஷ்டமும் அதிலிருந்து மீண்டுவரும் மார்க்கத்தையும் உலகம் அறிந்துகொள்ள வெளிப்படையாக பரீட்சை வைக்கும் கடவுள் ...கெட்டவர்களை விடுவதில்லை அவர்கள் படும் துன்பத்தை பிறர் அறியாது நிகழ்த்துவதாலே யாரும் அவருக்கு நேரும் துன்பத்தை பற்றி அறிய முடியவில்லை ?உதாரணமாக நல்லவர்க்கு குடும்பமும் குழந்தையும் அன்பாகவும் அறிவாகவும் வழங்கும் இறைவன் கேட்டவர்க்கு எதிர்ப்பதமாய் துஷ்ட குணங்களும் மதிப்பு தராத மனைவியையும் அல்லது கெட்டவழியில் சேர்த்த பொருளை விரயம் செய்யும் மனைவி மக்களை தருவார் .முடிந்தால் சிலரின் குடும்ப பின்னணியை பரிசோதித்து பாருங்கள் உண்மை விளங்கும் .

நாள் : 16-Oct-14, 10:12 pm

மேலே