பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ்...
பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு பொலிவியா மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால் நம்பவா முடிகிறது? ஆனால் அதுதான் உண்மை.
தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது.
இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர்.
பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார்.
பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து பலரும் இம்முறையில் வீடு கட்டும் முயற்சியை ஆரம்பித்துள்னர்.
தற்போது பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.