அன்பு நண்பர்களே ! அனைவருக்கும் எனது மனமார்ந்த தீப...
அன்பு நண்பர்களே !
அனைவருக்கும் எனது மனமார்ந்த தீப ஒளித்-திருநாள் நல்வாழ்த்துக்கள் !
ஏனோ தெரியவில்லை தீபஒளி தீப-ஒலியாகி தீபா-வலியாகிவிட்டது !
அன்பு நண்பர்களே இந்த நாள் முழுவதும் அன்பையும் பாசத்தையும் நம் உறவுகளுடனும் நண்பர்களுடனும் இனிப்பும் பலகாரமும் தந்து பகிர்ந்து மகிழ்கிறோம் !
ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் நாம் நம்மோடு வாழும் உறவுகளைமட்டும் மறந்து அவர்களுக்கு சங்கடத்தை மட்டுமே தருகிறோம் !
ஆம் நண்பர்களே !
நம்மோடு கூடவே வாழும் பறவைகளும் விலங்குகளும் இந்த ஒரு நாளில் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றன !
சற்று சிந்தித்துப் பாருங்களேன் !
சில நேரங்களில் ஒற்றை வெடி வெடிக்கும்போது நமக்கே இதயம் சற்று நின்று பின் துடிக்கிறது. நமக்கே இப்படி என்றால் பாவம் அந்தச் சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும் !
பட்டாசு வெடிக்காவிடில் நமக்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை !
ஆனால் ஒற்றை பட்டாசு இந்த ஒரு நாளில் நம் நண்பர்களான பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன !
இன்று அல்ல பல ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டில் பல கிராமங்கள் இன்னும் பட்டாசு வெடிக்காமல் தீப-ஒளித் திருநாளைக் கொண்டாடுகின்றன !
காரணம் கேட்டால் பறவைகளும் விலங்குகளும் எங்கள் நண்பர்கள் அவர்களை அச்சுறுத்தும் பட்டாசுகளை நாங்கள் வேடிக்கமாட்டோம் என்கிறார்கள் !
என்ன நண்பர்களே பறவைகளும் விலங்குகளும் அவர்களுக்கு மட்டும்தான் நண்பர்களா !
நமக்கு இல்லையா !