உரக்கச் சொல்லவே தயக்கம் என்னவோ ? ஆயிரம் வார்த்தைகள்...
உரக்கச் சொல்லவே
தயக்கம் என்னவோ ?
ஆயிரம் வார்த்தைகள்
ஓயாது கொட்டுகிறாய்
சொல்ல நினைப்பதை
வார்த்தை மழுப்பிடாது
விழிக்கு நேர் சொல்லிடு
விளங்கிட சொல்லிவிடு
மறைந்து எய்தாதே அம்பு
மனத்தினில் இருப்பதை
உள்ளபடியே சொல்லிடு
உருத்தாய் சொல்லிவிடு
நிமிர்ந்து நீயே சொல்லிடு
அதிகாரமாய் சொல்லிடு
செருக்கோடு சொல்லிடு
உறுதியிட்டு சொல்லிடு
காத்திருப்பது வீணாகும்
காலம் கடக்கும் முன்னே
கனிந்து முன் சொல்லிடு
நம்பி காதலை சொல்லிடு
அச்சத்தால் பதுங்கிடாதே
துணிந்து மனம் சொல்லிடு
உன் நேசம் நிஜம் என்றால்
இன்பம் பரிசாகும் நம்பிவிடு !!