அன்னதானம் சிறந்ததானம்; உலகிலேயே மிகச்சிறந்த தானம் அன்னதானம் அப்டீன்னு...
அன்னதானம் சிறந்ததானம்;
உலகிலேயே மிகச்சிறந்த தானம் அன்னதானம் அப்டீன்னு முன்னால(நான் சின்னபுள்ளையா இருக்கும்போது) நிறையபேர் சொல்லுவாங்க ஆனால் அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன், அப்போது அறியாத வயசு என்பதாலோ என்னவோ அதுல எனக்கு ஈடுபாடும் இல்லை..
இப்போதுகூட நான் அலுவலகத்தில் பணிபுரியும் போது மதியம் சாப்பிட்டு முடிஞ்சதும் மீதி சாப்பாட வெளில கொட்டிடுவேன் என்னோட உயர் அதிகாரி முதல் பியூன் வரைக்கும் இதை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவாங்க இப்டி எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க பணத்த கீழப்போட்டாலும் பரவாயில்ல சாப்பாட இப்டி கொட்டக்கூடாது ஒருவேளை சாப்பாடு இல்லாம கஷ்டப்படுற மக்களுக்குத்தான் இதோட அருமை தெரியும் அப்டி இப்டின்னு கிளாஸ் நடத்துவாங்க...
நான் வேற வழியில்லாம அவங்க பதவிக்கும் வயசுக்கும் மரியாதை கொடுத்து அவங்க சொல்றத அப்டியே கேட்டுட்டிருப்பேனே தவிர அதப்பற்றி ஒருக்கா கூட யோசித்ததே இல்லை......!
எனக்கு 23வயசு ஆச்சிங்க இதுவரைக்கும் பண்ணாத ஒரு நல்லவிஷயத்த இனிப்பண்ணப்போறேன் அத உங்ககூடயும் பகிர்ந்துக்குறேன் முடிஞ்சா நீங்களும் என்ன மாதிரி செய்யலாம்.......
அக்டோபர்6 என் தோழிக்கு நிச்சயதார்த்தம் அங்கு சென்ற எனக்கு கிடைத்த ஒரு பெரிய தகவல்தான் இது என் மனதை மாற்றிய நிகழ்வு.........
தோழியின் அப்பாவைப்பார்த்து பேசினேன் சிறிது நேரம் எங்களுடன் பேசின அப்பா திடீரென.... நேரம் ஆச்சிமா அந்த பொருட்களை எல்லாம் கொண்டு வா என்று அவள் அம்மாவிடம் கத்தினார்.
என்ன என்று நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலைக்கண்டு வியந்தேன்..!!!!!!?
அவங்க வீட்டுல என்ன பங்க்சன் வந்தாலும் முதலில் அவங்கவீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய அனாதை ஆசிரமத்திலிருக்கும் மனிதர்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு அன்னதானம் செய்வாராம் அதுல 16ஊனமுற்றகுழந்தைகளும் இருக்காங்களாம் 3வருடமாக அவர் இத செய்துட்டு வாராராம் இன்னும் செய்வேன் அப்டீன்னு சந்தோஷமா சொல்றாரு நிறைய பணமிருந்தால் இன்னும் நிறைய செய்வேன்னு பெருமிதத்தோட என் தோழியின் அப்பா சொல்றாங்க இதுல முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் நடுத்தரகுடும்பம்தான் இருந்தும் இப்படி ஒரு நல்லமனம்.........
இதைக்கேட்டதும் எனக்கும் ஒரு யோசனை தோன்றியது எனக்கு இனி வரக்கூடிய எல்லா பிறந்தநாளுக்கும் என்னால முடிஞ்ச அளவுக்கு சாப்பாடு இல்லாம கஷ்டப்படும் இந்த மாதிரி கஷ்டப்படும் மனிதர்களுக்கு முடிந்த உதவி செய்யலாம் என முடிவெடுத்துட்டேன் இந்த முடிவ என் வீட்டுலயும் என் உயிரான உடன்பிறவாஅண்ணன் கிட்டயும் இன்னும் சொல்லல இனிதான் சொல்லணும் அதற்கு முன் உறவுகள் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்......!