எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கற்பனை காதலி:: பிரியமானவளின் பிரிவு:: அன்று நம் காதலித்த...

கற்பனை காதலி::

பிரியமானவளின் பிரிவு::

அன்று நம் காதலித்த போது
சிரித்துக்கொண்டிருந்த
அந்த செவ்வானம் இப்போதும்
சிரித்து கொண்டதான் இருக்கிறது
ஆனால் நம் காதலே
கல்லரை ஓரம் கண்ணீர் விடுகிறது

எப்படி எழுதுவேன் என் வலிகளை
ஒரு எழுத்தாள,ஒரு வார்த்தையாள
ஒரு வரியாள ,ஒரு சரித்திர வரலாறே
எழுதினாலும் சாத்தியமாகது அன்பே
நம் காதலுக்கு

காதலித்த நிமிடங்கள்
கண்முன் நிக்குதடி
காதலித்த இடமெல்லாம்
வெற்றிடமாய் வெகுதடி

கொட்டும் மழையில்
கொஞ்சி நனைந்ததும்
அடிக்கும் வெயிலில்
அணல் காயிந்ததும்

நீ கள்ளியின் மேல்
எழுதிய என் பெயரும்
என் இடது இதயத்தின்
மேல் எழுதிய உன் பெயரும்
காலமழையில் கரைந்திடிதா
கல்வெட்டுகள் அன்பே!!

மொட்டுகள் வெடித்திடும் சப்தமும்
மலர்கள் மலர்ந்திடம் தருணமும்
உன் மௌணபார்வையின்
மறுதலை பென்னே!!!!

என் உள்ளம் உச்சரித்த வார்த்தையும்
உன் உதடு சித்தரித்த வார்த்தையும்
ஒன்று தான் "காதல்,காதல்,காதல்"

அடி ப்ரியமானவளே
இடையில் வந்த இந்த பிரிவால்
எங்கே போனது நம் காதல்!!

நான் உனக்கு செய்த
சத்தியமும்
நீ உனக்கு செய்த
சத்தியமும்
நம்மை சந்தித்த பிரிவால்
சாய்ந்து விட்டனவா????

சுற்றி இருந்த சொந்தங்கள் தான்
சூறையாடி விட்டது நம் காதலை

நதிநீரில் நனைந்த நிலவெடுத்து
நட்சத்திர நார் கிழித்து
சந்தனநிலவை சாட்சி வைத்து
உன்னை சந்திக்க வருகிறேன்

அதுவரை பிரிந்திருந்தவாரே
விரும்பிருப்போம்
விரைவில் வருகிறேன்
உன் விரல் பிடிக்க.............

நாள் : 2-Nov-14, 12:22 am

மேலே