எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குடம்புளி மீன் குழம்பு : தேவையான பொருட்கள் :...

குடம்புளி மீன் குழம்பு :

தேவையான பொருட்கள் :
மீன் 1/2 கிலோ
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
குடம்புளி 3 சுளைகள்
தேங்காய் பால் 2 கப்
தனியா தூள் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
என்னை 1 ஸ்பூன்
கருவேப்பிலை, உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

எரியும் அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி என்னை விட்டு, முதலில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை இட்டுக் கலந்து வதக்கவும். பிறகு சுத்தமான மீன் துண்டுகளும், ஒரு குடம்புளியில் உள்ள மூன்று சுளைகளையும் இட்டு வதக்கவும். பிறகு ஒரு கப் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின் மிச்சமுள்ள ஒரு கப் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். எரியும் அடுப்பை நிறுத்திய பிறகு கருவேப்பிலை போட்டு மூடிவைக்கவும். சிறிது நேரம் கழிந்து அதிலிருந்து பாதியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, அதை எடுத்து என் வீட்டிற்குவந்து என்னிடம் கொடுத்தால் உங்களுக்கு நன்றி கூறி சுவைத்து இன்புறுவேன். சோறு என் வீட்டில் நானே செய்து கொள்கிறேன். எல்லா வேலைகளையும் உங்களிடம் தருவது முறையல்ல என்று எனக்குத் தெரியும்.

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Nov-14, 3:58 pm

மேலே