எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யார் மீது குப்பை வீசுகிறாய்.... இந்த தரணியின்மீதா???? இல்லை...

யார் மீது குப்பை வீசுகிறாய்....
இந்த தரணியின்மீதா????

இல்லை இல்லை உன் பூமித்தாயின் மீது.....

உனக்காக இரண்டு அணு குண்டை மார்பில் தாங்கிவிட்டேன் ..
உனக்காக சூரியன் சுட்டெரிக்கும் பார்வையை தாங்கிவிட்டேன்.
உனக்காக என் உடலின் பிளவுகளை தாங்கி கொண்டேன்....

உன்னால் எனக்கு நிம்மதி இல்லை ...
உன்னால் எனக்கு உறக்கம் இல்லை ...
என் உடலெல்லாம் சுற்றுகிறது...

எனக்கு ஒன்று செய்வாயா மனிதா....
என்னை அழகாய் படைத்த இறைவன்..
நீ என் மீது செய்யும் அசுத்ததினால் கண்ணீர் வடிக்கிறான்...
அதை கைகள் கொண்டு துடைக்க தேவையில்லை ...
உன் கையில் இருந்து தூக்கி எரியும் குப்பையை மட்டும் கண்ட இடங்களில் தூக்கி எரிவதை நிறுத்திவிடு.....

உன் தொண்டை ஏற்க்க மறுக்கும் எச்சிலை....
என் மீது கண்ட இடங்களில் துப்புவதை நிறுத்திவிடு....

நடக்கும் போது நீ எறியும் குப்பைதான் ....
உன் எதிர்கால சந்ததிக்கு நீ கொடுக்கும் விஷம்...
இதை தெள்ள தெளிவாக புரிந்து கொண்டால் வாழ்வில் உனக்கில்லை கஷ்ட்டம் ....

நீ தூக்கி எரியும் அசுத்தத்தை ...
சுத்தம் செய்யப்போவதும் ஒரு கைதான் என மறந்து விடாதே.
மிருகங்கங்கள் போல நீயும் நடந்து கொள்ளாதே ....

தமிழர்களுக்கும் ...
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்....

பதிவு : சாமுவேல்
நாள் : 27-Dec-13, 5:37 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே