எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னை ஐஐடியில் மாணவர்களில் ஒரு தரப்பினர் முத்தமிடும் போராட்டத்தில்...

சென்னை ஐஐடியில் மாணவர்களில் ஒரு தரப்பினர் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் - இன்றைய செய்தியைப் படித்து.....
======================================================================================

பெத்தவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் எண்ணம் கொண்ட இந்த அவல சமூகத்தாருக்கு...
இப்படி பட்ட முத்த போராட்டம் ஒரு கேடா????

ஏன் இவர்கள் பெத்தவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பாவிகளுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் குழந்தை தொழிளார்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் பாலியல் தொழிளார்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் எலியைத் தின்று தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்காக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான சிறுமிகளுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

சுதந்திரம் என்பது என்ன??

நாலு சுவற்றுக்குள் சுதந்திரமாக நடக்கும் இன்பத்தை
நாலு பேருக்கு நடுவே நடுத்தெருவில் நடத்துவதுதான் சுதந்திரமா?

நாகரிகம் என்பது என்ன??

பிள்ளைகளுக்கு எதிரிலோ..
பெற்றவர்களுக்கு எதிரிலோ.. அல்லது
மற்றவர்களுக்கு எதிரிலோ...
கட்டிய மனைவிக்கு கூட முத்தம் கொடுக்க விரும்பாத / விருப்பமில்லாத
நாகரிக மரபு கொண்ட நம் தேசத்தில்
நட்ட நடு பகலில்
நட்ட நடு தெருவில்
நாடே பார்க்க
தெரு ------கள் மாதிரி பின்னிக் கொள்வது நாகரிகமா?

நாணம்தான் இல்லை...
மானம் கூடவா இல்லை...

எத்தனை தேச தியாகிகளின் உயிர் தியாகங்களுக்கு பிறகு பெற்ற சுதந்திரம் - ஐயோ
எத்தனைப் பெரிய தேச வியாதிகளாய் வளர்ந்து நிற்கிறது...

எத்தனையோ இந்தியர்களின் உயிர்களை
பயிர்களாய் நடவு செய்து
ஆங்கிலேயர்களை விரட்டி
சுதந்திரப் பூ பறித்தோம்...
அதை மாங்கல்யத்திற்கு வைப்பதை விட்டு விட்டு
மானங் கெட்டதெற்கெல்லாம் சூட்டுகிறோமே...

அந்த ஆங்கிலேயர்களை விரட்டி விட்டாலும்
அவர்களின் ஆங்கில மொழியின் சத்தமும்
அநாகரிக வாழ்வின் முத்தமும்
புற்று நோயாய் வளர்ந்து கொண்டே இருக்கிறதே...

வருத்தம் கொள்ள வைக்கும் வருங்காலத்தை நினைத்தால்
வலிக்கிறது மனது...
வழிகிறது கண்ணீர் இதை நினைத்தே அழுது...

பதிவு : ஜின்னா
நாள் : 15-Nov-14, 9:03 pm

மேலே