எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்றைய இசைப் பதிவின் தொடர்ச்சியாக இன்றும் அதே பாதிப்பில்...

நேற்றைய இசைப் பதிவின் தொடர்ச்சியாக இன்றும் அதே பாதிப்பில் அடுத்தது....!!
இந்தக் காணொளி மொத்த இந்திய இசைக்காக செய்யப்பட்ட மரியாதை. ஒரு ஜெர்மன் ஆர்கெஸ்ட்ரா எத்தனை அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.. சேகர் ..விஸ்வநாதன் - ராமமூர்த்தி .. ராஜா சார்.. ரகுமான்.. லக்ஷ்மிகாந்த் பியாரிலால்... மதன் மோகன்..சலில் சௌத்ரி..என நீள்கிறது பட்டியல்... உணர்வுகளைக் கொண்டாடத் தெரிந்த ஒரு தேசம்... ஒவ்வொரு இசையிலும் ஒவ்வொரு விதமான உணர்வு நமக்குள் விழுந்து உருண்டு செல்வதை தவிர்க்கவே முடிவதில்லை..

பாசம்.. அழுகை.. சோகம் .. காதல் .. ஏக்கம் .. எதிர்பார்ப்பு.. வெற்றி.. என அடுக்கடுக்காக வித விதமான எண்ணங்கள் நமக்குள் பரவி வழிகிறது.. இசையயும் ஒரு மொழியாகவே வளர்த்து வந்திருக்கிறது என் கலாச்சாரம்..அதை ஏனைய தேசங்களுக்கும் இசை வழியாகவே பரப்புகிறது.. இதுதான் நாங்களென்று.. அருமையான காணொளி. இசையமைப்பாளர்களும் ஒருவகையில் கடவுள்களே..என நான் மொழிந்ததின் தொடர்ச்சியாக.. இசையை சரியான விதத்தில் கொண்டு சேர்க்க எழுத்துக்கள் கோர்க்கும்.. தொடுக்கும்... சூட்டும்.. கவிஞர்களோ..... !? என்ன சொல்வது எனத் தெரியவில்லை........ காணொளி பாருங்கள்

பதிவு : கட்டாரி
நாள் : 21-Nov-14, 8:10 am

மேலே