எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல்...

மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலம் சோதனையானதாகும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

ராசி : மேஷம்
நட்சத்திரம் : அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
அதிஷ்ட கல் : பவளம்
அதிஷ்ட வண்ணம் : சிகப்பு
அதிஷ்ட எண் : 1, 3, 9
அதிஷ்ட திசை : தெற்கு


தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக பல கஷ்டங்களையும், நஷ்டங்களை தந்தாலும் ஓரளவு நிம்மதியையும் தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது. எல்லோரும் நல்லவர்கள் என வாரி இரைத்ததையெல்லாம் விட்டு விட்டு சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் புரிந்து செயல்படப்பாருங்கள்.

சனி 10-ஆம் வீட்டோனாகி, 10-க்கு 11-ஆமிடமான 8-ல் உலவுவதால் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள்.
உழைப்பும் அலைச்சலும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைக்கும். ஆயுள் காப்பீடு, மற்றும் ஆயுள் சம்பந்தமான பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத மாற்றங்களும் ஏற்படும்.

சனி பாதக ஸ்தானத்துக்கு அதிபதியாகி, 8-ல் இருப்பதால் மரண பயம் உண்டாகும். வீண் பழி சுமத்தப்பட நேரலாம்.
சனி 8-ல் செவ்வாயின் வீட்டில் இருப்பதால் வீண்வம்பு, வழக்கு, சண்டை, சச்சரவுகளில் ஈடுபாடு உண்டாகும்; எச்சரிக்கை தேவை. ஜலபயம் உண்டாகும். நெருப்பு, மின்சாரம், ஆயுதங்கள், தளவாடங்கள், இயந்திரங்கள் ஆகியவை சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால் விபத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். மனத்தில் வெறுப்பும், கவலையும் ஏற்படும். சமூக விரோதிகளால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். நிலம், வீடு, கால்நடை, வாகனம் போன்றவற்றால் செலவுகள் கூடும். உடல் ஆரோக்கியம் ஒருநாள் போல் மறுநாளிராது.

மறைமுக நோய்நொடிகளுக்கு ஆளாக நேரலாம். சகோதர நலம் பாதிக்கும். உடன்பிறந்தவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் உண்டாகும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. தைரியம் குறையும். தந்தையால் செலவுகள் ஏற்படும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் உண்டாகும். கைப்பொருள் களவு போகவோ, காணாமல் போகவோ கூடும் ஆதலால் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. இரவுப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. சனி பெண் ராசியில், அஷ்டமத்தில் இருப்பதால் பெண் சம்பந்தமான நோய்நொடிகள் ஏற்படும். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மக்களால் சில சங்கடங்கள் ஏற்படும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புத் தேவை.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலம் சோதனையானதாகும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

Sani Peyarchi Palan 2014
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

பதிவு : கீத்ஸ்
நாள் : 17-Dec-14, 12:27 pm

மேலே