எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பென்றாலே அம்மா... நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்!....

அன்பென்றாலே அம்மா...

நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்!.

யாரும் கற்று தராத ஒரு சொல் அம்மா...உன்னாலே பிறந்தேன்,உன்னாலே வளர்ந்தேன்..
எனக்காக நீ பட்ட கஷ்டங்களை எண்ணி பார்கிறேன் தினம் தினம்...
காடு,மலை,பல கடல் தாண்டி நான் சென்றாலும் என் உயிர் என்றும் உன்னுடனே.!
நான் செல்லும் பாதைகள் யாவும் உன் அன்பின் பாதைகளே ..
என்னை சுமந்த பாரத்தை விட இப்போது நான் உன்னை விட்டு பிரிந்திருக்கும் வலி மிக கொடியது...
தினம் தினம் கனவில் நீ வரவேண்டும் என்பதக்காக வராத தூக்கத்தை தேடி அலைகிறேன்...
போய்வரவா என்று நான் அன்று சொன்ன அந்த நிமிடமே உன் பிரிவினை நான் உணர்ந்தேன்..
உன் தவிப்பு ஒருபுறம் இருந்தாலும் நம் தேசத்தின் தவிப்பு என்னை போய்வா என்றது..
இனி எப்போது கிடைக்கும் உன் தாய்மடி என்னும் அந்த சிம்மாசனம்... காத்திருப்புடன்... அம்மா பிரியன் @ பிபி ஆறு.

பதிவு : பிபி ஆறு
நாள் : 19-Dec-14, 2:27 pm

மேலே