“அறிமுகமாகும் ஆனந்த வேளை..! ” ---------------------- அழகான மாலை...
“அறிமுகமாகும்
ஆனந்த வேளை..! ”
----------------------
அழகான மாலை
சுபமான வேலை
அன்னார்ந்துப் பார்த்தேன்
மன(ம்)மங்கு இல்லை..!
சிலையோடு மோதும்,
அலைகொண்ட சிநேகம்;
கண்மூடிப் பார்த்தேன்;
உயிர்தாங்கும் அன்னை ..!
வீசாத காற்றும்
பேசாத உறவாய்
பக்கத்தில் வரவே
பாசாங்கு செய்யும்..!
ஆறாத கதிரின்
அனல்மேனி தாகம்;
பொன்னாடைப் போற்ற -
போர்வைக்குள் மின்னும்..!
வேட்டைக்குச் சென்று,
பொருள் ஈட்டிக் கொண்டு;
வீட்டுக்குத் திரும்பும்
பறவைகள் கூட்டம்..!
இருள்கூடும் நேரம்;
நிலவென்னும் தீபம்;
இதமாக வந்து,
துணையொன்றைத் தேடும்..!
அவள் கொண்ட மோகம்
அணையாமல் தீர்க்க,
மலர்ந்திட்ட மல்லி
மடிந்தாலே இன்பம்..!.
இயற்கைக்கு என்றும்
இதிகாசம் இல்லை;
அடைகாத்துச் செல்ல
ஆசைகள் தொல்லை…!
எண்ணத்தை வெல்லும்
அதிகாரம் இல்லை..
ஏன்? என்ற கேள்விக்கு
எல்லைகள் இல்லை..!
போதும் என்றாலே
துன்பங்கள் இல்லை;
பொறுத்தார்க்கு வெற்றி
பறிபோவதில்லை..!
நான்கண்ட மாலை
நலமானதிங்கே..!
நல்லதொரு எழுத்தை
நட்டுவைத்தேன் இன்றே..!
தாயுந்தன் மடியில்
தமிழென்னும் பாலை
அழகென்று வைத்தான்
தளம்கண்ட தமிழன் – இணைய
தளம் கண்ட தோழன்..!
தமிழென்றும் எங்கள்
மூச்சாகும் இங்கே ...!
தலை சாய்ந்தாலும்
வீரம் அழியாது இங்கே...!
அழியாது இங்கே...!!
அழியாது இங்கே...!!!
என்றும் அன்புடன் | Jack Ji. Je