'காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை நிறுவ...
'காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை நிறுவ வேண்டும்' என்று 'அகில பாரத இந்து மகா சபை' முடிவெடுத்திருக்கிறது. முதல் சிலையை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இக்கூட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான கூட்டம் இல்லையா? இந்திய மக்களின் நல்லிணக்கத்தை குலைக்கும் சதிகார கூட்டம் இல்லையா? இதற்காக இந்திய / தமிழக அரசுக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
இதுதான் மோடி சொன்ன இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களா? மோடி பதவிக்கு வந்த ஆறு மாதங்களில் இந்துத்துவ அரசியலை தீவிரமாக முன்னெடுத்ததிலும், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்குவதிலும், மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதிலும், 4000 ஆயிரம் இஸ்லாமியர்களை இந்துக்களாக மதமாற்றம் செய்ததிலும் தான் மோடி அரசு வளர்ச்சியை கண்டிருக்கிறதா?
இதுதான் ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வளர்ச்சித் திட்டங்களா?
இல்லை, இல்லவே இல்லை....
இது இந்துத்துவத்தின் வளர்ச்சி. காவிகளின் தீவிர வளர்ச்சி. அத்தோடு கோட்சேக்களை உருவாக்க முயலும் தீவிர மதவாதம். ஆனால் கொல்லப்படுவதற்கு இந்தியாவில் காந்திகள் இருக்கிறார்களா? இருக்கிறார்கள்.
'சாதியை ஒழிக்க வேண்டும்' என்று காந்தி சொன்னதால்தான் 'கோட்சே' கொன்றான். இன்று சாதி ஒழிப்பை பேசும் பல புரட்சிகர இளைஞர்களை இந்த கோட்சேக்கள் என்ன செய்வார்கள்?