இன்று தோழர் மீனாம்பாள் பிறந்த தினம்! -------------------------------------------------------------- 'படி...
இன்று தோழர் மீனாம்பாள் பிறந்த தினம்!
--------------------------------------------------------------
'படி தாண்டா பத்தினி' என்று பெண்களை வீட்டு வாசல் படிகளுக்கு உட்புற எல்லைக்கோட்டை நிர்ணயித்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்திய பெண்களில் இருவர் தமிழச்சிகள்.
ஒருவர் முத்துலஷ்மி, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று பெரும் போராட்டங்களுக்கிடையே படித்து 'இந்தியாவின் முதல் பெண் டாக்டர்' என்ற புகழைப் பெற்றவர்.
இவரைவிட பெரும் பாய்ச்சலாய் கிளம்பியவர் மீனாம்பாள். கல்வி தகுதியில் நீதிபதி. அந்த காலங்களிலேயே வெளிநாடுகளில் சென்று படித்தார். பெண்கள் விடுதலைக்கு போராடினார். இந்தி எதிர்ப்பு போரில் முதல் படைத் தலைவியாய் நின்றார். மீனாம்பாளின் போர்க்குணங்களை கண்டு பிரமித்தவர் தோழர் அம்பேத்கர். 'இவரே என் தங்கை' என்று பெருமிதத்தோடு மகிழ்ந்தார். இவ்வளவு ஏன்.....
ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்பட்ட தோழரை 'பெரியார்' என்று சிறப்பித்தவர் மீனாம்பாள். நாளடைவில் ஈ.வெ.ராமசாமி பெயர் மறைந்து இன்றும் 'பெரியார்' என்று அழைப்பதற்கு காரணமானவர் தோழர் மீனாம்பாள்.
பெண்களுக்கு கல்வி முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்திய மீனாம்பாள் ஆண்களுக்கு நிகராக தன்னை சமூகத்தளத்திலும் / அரசியல் தளத்திலும் / பணியிடங்களிலும் தன்னை வளர்த்தெடுத்த சுயமதிப்பு கொண்ட போராளி.