எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது நடமாடும் 6டி திரையரங்குகள் டெல்லியில்...

பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது நடமாடும் 6டி திரையரங்குகள்

டெல்லியில் பிப்ரவரி மாதம் முதல் 6டி திரையரங்குகள் நகரின் மூன்று முக்கிய இடங்களில் செயல்படுமென்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லியின் முக்கிய பகுதிகளான கன்னாட் ப்ளேஸ் மற்றும் சரோஜினி நகர் ஆகிய இரண்டு இடங்களில் இந்த சேவை முதற்கட்டமாக தொடங்கப்படுவதகத் தகவல்கள் வேளியாகியுள்ளன.

18 முதல் 20 இருக்கைகள் கொண்ட இந்த நடமாடும் திரையரங்கம் அமைந்துள்ள வாகனத்தில், கணினி கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய மின்னணு தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த திரையரங்கில் ஆறு மாறுபட்ட கோணங்களில் இருக்கையை சரி செய்து கொள்ளும் வசதியும், தீ, பனி, தண்ணீர், புகை, காற்று போன்ற மிகவும் நுணுக்கமான ஒலிகளைக் கொண்ட 21 வகையான ஒலிக் கருவிகள் இருக்கும் என்று டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் திரையரங்கம் பூங்கா, சந்தைகள் போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டு திரைப்படங்களை ஒளிபரப்பும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாள் : 5-Jan-15, 6:06 pm

மேலே