பணம் மதிப்பிழக்கக்கட்டும் பாவிகள் ஊரிலும் ஏழைகள் இல்லை என்று...
பணம் மதிப்பிழக்கக்கட்டும்
பாவிகள் ஊரிலும் ஏழைகள்
இல்லை என்று சொல்ல...
அணிகலன்கள் அற்பமாகட்டும்
அகத்தின் அன்பதிலே
அழகு உண்டென்று சொல்ல...
கொடை கொடா வளங்கள் குன்றட்டும்
கொண்டவர் கைகள்
பஞ்சம் கண்டுணர....
பகை சூடும் இதயங்கள் பதப்படட்டும்
இல்லவை காணுமிடம்
இரக்கத்தால் ஆற்றிட...
நல்லவை கொண்டு நாளும் நமை ஆழ
இல்லோர் யாவரையும் நம்முறவாய்
இனம் கொள்ளல் இயலும்...!!!
....கவிபாரதி....