தைத்திருநாள் கவிதைப் போட்டிக்காக கவிதைகளைச் சமர்ப்பிக்க இன்னும் ஒரு...
தைத்திருநாள் கவிதைப் போட்டிக்காக கவிதைகளைச் சமர்ப்பிக்க இன்னும் ஒரு வாரகால அவகாசம் இருக்கின்றது என்பதனை நினைவூட்டுக்கின்றோம் !
கவிதைப் போட்டிக்கான நிபந்தனைகளை "போட்டி" பிரிவில் இருக்கும் தைத்திருநாள் கவிதைத் திருவிழா என்ற அறிவிப்பினைப் படிப்பதன் மூலம் அறிந்துக் கொள்ளுங்கள் !
பதிவிடப்பட்டிருக்கும் கவிதைகள் நடுவர்களின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுக்கின்றன ! ஆதலினால் நீங்கள் போட்டிக்காக பதிவு செய்திருக்கும் கவிதைகளை மீளவொரு முறை சரிபார்த்துக் கொள்ளுமாறு வேண்டப் படுகின்றீர்கள் !
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனிகள் அனைத்தும் சரிவர பின்பற்றப் படுவதோடு பின்வரும் விடயங்களையும் கவனிக்கவும் !
====
விழாக்குழு அறிவித்த தலைப்புக்கள் மட்டுமே நடுவர் குழுவிற்கு அனுப்பப் படும் ! தலைப்பில் ஒரு சொல் தவறாக இருப்பினும் அந்த படைப்பு நிராகரிக்கப் படும். தலைப்புகளை அனைவரும் சரிபார்க்கவும் !
====
தலைப்புடன் "பொங்கல் கவிதைப் போட்டி 2015" என்ற வாசகம் கட்டாயம் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். அத்துடன் கவிதையை சமர்ப்பிக்கும் முன் "மற்றப் போட்டிகளுக்கு" என்ற இடம் சொடுக்கப் பட வேண்டும்.(இந்த பட்டியலில் இருந்தே கவிதைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
=====
விழாக்குழு அறிவித்த தலைப்புக்கள் அல்லாமல் "பொங்கல் கவிதைப் போட்டி 2015" என்ற இணை தலைப்புடன் வந்திருக்கும் படைப்புகள் "தைப்பொங்கல் கவிதைத் திருவிழாவில்" சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
====
தொடர்ந்தும் தொடர்பில் இருக்க வேண்டப் படுகிறீர்கள். தொடரும் அறிவித்தல்கள் கவனிக்கப் பட வேண்டிய முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கலாம்.
இந்த அறிவித்தலை பகிர்வதன் மூலம் உங்கள் தோழர்களுக்கும் இந்தச் செய்தியை கொண்டு சேர்க்கலாம் !
=====
பெருமையுடன்
விழாக்குழு !