நாளைய விடியல்!!! சிறகுகள் நீழும்வரை வானம் விரியலாம்! சிலுவைகள்...
நாளைய விடியல்!!!
சிறகுகள் நீழும்வரை
வானம் விரியலாம்!
சிலுவைகள் நிலைக்கும் வரை
மனம் அதை சுமக்கலாம்!
கனவுகள் கலையும் வரை
விழி அதை மறைக்கலாம்!
தயக்கங்கள் குறையும் வரை
வார்த்தைகள் தவிக்கலாம்!
இன்றைய விடியல் உனதாக இல்லையெனில்
நாளைய விடியல் உனதாகலாம்!
இருளுக்கும் வெளிச்சம் வரும்!
உன் நிலமைக்கும் மாற்றம் வரும்!
கோபுரத்தின் நிழல் மண்ணில் விழுவதால்
அது தாழ்ந்து போகாது!
உன் உணர்வுகள் சில நாள் மிதிக்க படுவதால்
அது சிதறி போகாது!
வெற்றி தொலைதூரம் இல்லை!
விரக்திக்கு இடமேதுமில்லை!
உனது நாளை நலமாய் விடியும்!!!!