ஏதோ ஒரு வெறியில்... ஆவேசத்தோடு........ ஒரே இரவில் சுமார்...
ஏதோ ஒரு வெறியில்... ஆவேசத்தோடு........ ஒரே இரவில் சுமார் 200 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை எழுதிவிட்டேன்.
நாவலின் தலைப்பு : “ வராத காவேரியும்... வரும் மீத்தேனும் “
இன்றைய... அன்றைய அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் நாவல் இது. விரைவில் தைரியமான பதிப்பக்கதார் கிடைத்தால்... புத்தகமாக வெளியிடுகிறேன். இல்லை எனில்...
இந்த தளத்திலே தொடராகவே பதிவு செய்கிறேன்.
அந்த நாவலில் ஒரு சிலவரிகள் இதோ...
“ இந்த மண்ணுல பொறந்து, வளர்ந்து, காவிரி தண்ணில குளிச்சி, துவைச்சி.. பட்டிணத்துக்கு போயி, மொள்ளமாரித்தனம் செஞ்சு, ஆட்சிய பிடிச்ச மஞ்ச துண்டுக்காருக்கும் தெரியல..... வக்கீலுக்கு படிச்சு, வோட்டு எலும்பு துண்டுக்கு கருப்பு துண்டு போட்டுகிட்டு தொண்ட கிழிய கத்துற எந்த கோமாளிசாமிக்கும் தெரியல........ , மைசூர் மகாராஜா பேலஸ்ல இருந்து பிளேன்ல வந்து.. டான்சு ஆடி.. கலியாணவே பண்ணாத அந்த உததமியை எப்படி குற சொல்ல..? ... தமிழ் சனத்துக்கு வாரி வாரி வழங்கின பாவத்துக்கு செயிலுக்கு போயிட்டு வந்த அந்த தாயிக்கும் தெரியல சாமி..........மீத்தேனுன்னா....... தேன் இல்ல .. விஷமுன்னு....!!
-------------------------------------------------
சீமையில இருந்து மிசின் வந்துருக்கு..... குழித்தோண்டுறாக மாமா..............குழி....?
எதுக்கு புள்ள ??
வேற எதுக்கு .. ? நம்மள அதுல போட்டு புதைக்கதான்...........?
-------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்