நட்சத்திர கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸ்...
நட்சத்திர கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸ் அபார வெற்றி
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐதராபாத் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி, கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதியது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை ரைனோஸ் 2 விக்கெட்டக்கு 148 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சாந்தனு அரை சதம் அடித்தார். இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்ககிய கேரள அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னை அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 52 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்த சாந்தனுவிற்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. சென்னை அணி வருகிற 18-ந் தேதி வீர் மராத்தி அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி பெங்களூரில் நடக்கவிருக்கிறது.