எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே...

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

கால்வண்ணம் சதிராடும் கைவண்ணம் விலையாடும் தென்னாட்டுப் பொன்வண்ணமே
மான்வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

( கவியரசு கண்ணதாசன் அவர்கள்)

பதிவு : யாழ்மொழி
நாள் : 22-Jan-15, 10:37 am

மேலே