எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதத்தைக் கட்டிக்காத்த ஷைல் தேவி 'அம்மா' ! -...

மனிதத்தைக் கட்டிக்காத்த ஷைல் தேவி 'அம்மா' ! - வரலாறு பேசட்டும்!!

எண்ணம் முளைக்க வைத்த செய்தி கீழே.

மனித மேன்மை, மெய்ஞானம், அகண்ட அறிவு என இந்த மண்ணின் நறுமணங்களின் ஊடே சீழ் வாசம் வர எந்தெந்த அடிப்படைவாதிகள் காரணமோ திருந்துங்கள்!

மறுபிறவியை யாரும் உணர்ந்ததில்லை! நவீன உலகில் உயிராபத்து கூடிய நிலையில் அடுத்த நாளும் நமக்கு கிடைக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி இருக்கையில் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?!!

வீரம் என்றும் கடமை என்றும் மூளைசலவை செய்யும் அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து தப்பித்து உங்கள் வாழ்க்கையையும் - குடும்பத்தையும் அன்புடன் மகிழ்வுடன் அனுபவியுங்கள்.

நரகலை விட கேவலமான 'மதவெறி' என்றைக்கு நம் நாட்டை விட்டு அகலுமோ - அன்றைக்கு தான் நம் தேசம் சுத்தமான பாரதமாகும்.

பிறந்த ஒவ்வொருவரும் எதையும் சாதிக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, சமூகத்துக்கு வேதனைகளை பரிசளிக்காதீர்கள்!
//

செய்தி:
பீகாரில் கலவரக்காரர்களிடம் இருந்து 10 இசுலாமியர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்து விதவைத் தாய்.....!!!

பீகார் மாநிலம் அசிஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஷைல் தேவி. தனது இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் அந்தக் கிராமத்தில், கடந்த ஞாயிறு அன்று இந்து இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதால் அங்கு கலவரம் மூண்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், தனது வீட்டின் அருகில் வசித்து வரும் 10 இசுலாமியர்களை தனது வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு, அவர்களுக்கு காவலாக வீட்டின் வாசலிலேயே தனது மகளுடன் காவல் நின்றுள்ளார் ஷைல் தேவி. கலவரக்காரர்கள் வந்து கேட்ட போது, தனது வீட்டில் இசுலாமியர்கள் யாரும் இல்லை என்று மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த 10 பேரின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஷைல் தேவியின் அண்டை வீட்டாரான முகமது, ஷைல் தேவியை கடவுள் அனுப்பிய தேவதையாக கருதுவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஷைல் தேவியின் இந்தச் செயலை பாராட்டியுள்ள பீகார் முதல்வர் மஞ்சி, அவருக்கு ரூ. 51 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதான் இந்தியா.......!!! மதத்தை மறந்து மனிதத்தைக் கட்டிக்காத்த ஷைல் தேவி அமையாரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.....!!!

-அமராவதிபுதூர் பிரேம்நாத் [முகநூலில் எங்கள் " மனிதம்.." (manidham) குழுவை (group) சேர்ந்தவர்!]

நாள் : 22-Jan-15, 10:49 am

மேலே