அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேனாறு போலப் பொங்கி...
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்... ம்ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
பலமொழிகள் பாடம் பெற வரவேண்டும்.. ம்ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
வேற யாருங்க......? அவர் தான் அவரே தான்
கவியரசு கண்ணதாசன்
பி.பி.எஸ் அவர்களின் தேன் குரல்.... ( நினைவுப்படுத்திய அண்ணன் ராம் வசந்த் அவர்களுக்கு நன்றி)