எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று...

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்த படி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார். சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.

எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.

இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள் அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.

இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண். சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.

பதிவு : அரவிந்த்.C
நாள் : 28-Jan-15, 12:43 pm

மேலே