நியந்தா....... மூளைக்குள் ரத்தம் கசிவதை நீ உணர்வாயோ.....மௌனத்தில் இதயம்...
நியந்தா....... மூளைக்குள் ரத்தம் கசிவதை நீ உணர்வாயோ.....மௌனத்தில் இதயம் துடிப்பதை நீ அறிவாயோ.... சொல்லாத சொல்லில்....இல்லாத சொல்லில்..... நம் பேச்சுக்கள்...... உன் ரயில் புன்னகையை எந்த தூரத்தில் நான் தொலைக்க...... உன் கொஞ்சல்....மூச்சுக்களை எந்த கோபத்தில் நான் கரைக்க.... உனைக் காட்டும் என் பிம்பங்களில் துளியும் கறை இல்லை....உனைச் சேரும் என் கடலில் துளியும் கரை இல்லை...சண்டைகள் இல்லாத அன்பில்..... துன்பம் கூட இல்லை பெண்ணே.... எனது கவிதை உடைத்து.... தூளாக்கி தூளாக்கி ...... சல்லடையாக்கும்... உன் குரலில்.... கல்லுடைத்து கிடக்கிறது என் மரணம்.... காட்டாற்றின் வலிமை கண்ட கூழாங்கல் என இந்த பிரிவு..... ஒரு பால் வீதிக்குள் எனை கடவுளாக்குகிறது.... பனி விழும் தூரிகையை பாழ் கிணறு ஒன்று முட்கள் வளர்த்த கதை என நீ வனங்களில் ஒளிந்து கொண்ட பின் நிறக் குருடாகிப் போன பாலைவன புதை மணலில் நான் கால்களற்று கிடக்கின்றேன்.... நிஜத்தின் ஒளியாகவே நானும் இருந்திருக்கின்றேன்.... நிஜமாக இருப்பின்.... வந்து சேர்வாய்.... தோழி.... நீ வராத தேசத்திலும்... நான் உன்னோடு தான் இருப்பேன் என்று உனக்கும் தெரியும்....நியந்தாவின்....நிழலில்.... நிஜமாய் நான்......