எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

போவோமா அவுஸ்ரேலியா? போவோமா அவுஸ்ரேலியா? ஆளைக்கொல்லும் கடலினிலே ஓயாத...

போவோமா அவுஸ்ரேலியா?
போவோமா அவுஸ்ரேலியா?

ஆளைக்கொல்லும் கடலினிலே
ஓயாத பயனமென்று
லட்சம் பல கொடுத்து
லங்கா கடலினிலே
தாளம் போட்டுச்செல்ல
தமிழச்சி படகேறி
பாதி வழி பசித்திருந்தும்
மீதி வழி பயந்திருந்தும்
ஆழ் விழுங்கி மீன்கள் எல்லாம்
பசியாய் அலையும் அம்மா!
உண்ண உணவின்றி
கண் அயா்ந்தும் தூக்கமின்றி
ஆழக்கடலிருந்தும்
நா வறண்டும் நன் நீர் இல்லை,

மீதி வழி வரமறுத்து
தமிழச்சி அடம்பிடிக்க
ஆறுதல் செய்தவழை
மீதி வழி சேர்த்திடுவோம்,
கொலைகார திமிஙகிலங்கள்
ஆழைக்கொல்லும் சுறாக்கள்
காத்து நிற்கும் கண்டம் நோக்கி
சாதனைப்பயனம்,

தொந்தரவு பல பட்டு
தந்திரமாய் வந்துவிட்டோம்
தாய் தந்தை நினைவில் வர
உடன்பிறப்புகள் உணா்வில் வர
உண்ண உணவிருந்தும்
பசி தீர்த்தும் பயனின்றி
ஓராயுள் இதை ஒழிக்க
இதென்ன போராட்டம்,

அறியாத இடத்தினிலே
இரவினிலே தனியாய் நின்று
சந்திரனுடன் பேசிவிட்டேன்.
இன்று வரை நான் அறிந்து
என்னுடன் கூட வந்த ஒரே நன்பன்
அவன் மட்டும் தானே!
....................... .......என்றும் kss

பதிவு : ssana
நாள் : 14-Jan-14, 9:06 am

மேலே