எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொழும்பு airport இல் எலும்பாய் போனேனே! உணர்வெல்லாம் நாட்டில்...

கொழும்பு airport இல் எலும்பாய் போனேனே!
உணர்வெல்லாம் நாட்டில் விட்டு
உடல் மட்டும் plait ஏறி
ஈரோப் ம் சென்றுவிட்டேன்,
யாதகம் பாத்து அம்மா
நாட்டை விட்டு அனுப்பி வைத்தார்
நல்ல படி வாழ்வேன் என
நாலு காசு உழைப்பேன் என
நாட்டை விட்டு அனுப்பி விட்டு
உணர்வெல்லாம் தொலைத்துவிட்டு
உறக்கமற்று தவிக்கிறாள்.

வேதனையில் வந்து நான்
வேலையிலும் சேர்ந்து விட்டேன்
சாதனை ஒன்றும் செய்யவில்லை
சருகாய் போனேனே!
பாதி வயிறு சாப்பாடு
மீதி வயிறு எனைபபாரு!

அன்னையை நினைத்தோருநாள்
தந்தையை நினைததொருநாள்
குடும்பத்தை நினைத்தொருநாள்
காதலியை நினைத்தொருநாள்
நன்பனை நினைத்தொருநாள்
உண்ண மறந்து போனேனே!
ஊனாய் உறைந்து போனே!

ஈரோப் ன் இறுதி வெய்யில்
என்னை மட்டும் சுடவில்லை
உறவுகளின் உணர்வை கூட
நாடு சென்று சுடுகிறதே!

பெற்ற கடனை போக்கும் வரை
தவியாய் தவித்தே உழைத்தம் விட்டேன்
நாடு செல்ல நினைத்தும் விட்டேன்

ஆழைக்கொல்லும் நோயொன்று
யாதகம் பார்த்த அன்னை கூட
அறிய முடியா விதி ஒன்று
எலும்பை உருக்கும் நோயுடன்
கொழுமட்பில் நின்று பலம்புகிறேன்.
..........................அன்புடன் kss

பதிவு : ssana
நாள் : 14-Jan-14, 9:06 am

மேலே