எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை 7.30 தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வரையான என் பயணம்...

காலை 7.30 தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வரையான என் பயணம் ......
பனியின் தாக்கம் அதிகம் இருந்தாலும் ஜன்னலோரத்தையே மனம் விரும்பியது... சிக்கனம் பொருட்டு தனியார் பேருந்தை தேர்வு செய்தேன்... ஒத்தை அடி பாதையை ஓரிரண்டு அடி அதிகமாக்கி சாலையாக அமைத்திருந்தனர் ....விவசாய நிலங்கள் அதிகம் தென்படவில்லை .... காணி நிலங்களும் , விற்பனை நிலங்களும் அதிகம் இருந்தன.... ஆரம்பத்தில் காலியாக இருந்த பேருந்து போக போக அலை மோதலானது ..... நான் அவ்வப்போது ஜன்னலை நகர்த்தி காற்றை பிடித்தமான வகையில் வரவைத்து கொண்டிருந்தேன்...
அடுத்து என்னை சிந்திக்க வைத்தது என் முன் நின்ற அநேக நபர்களின் கைகளின் சாதியக் குறீடுகளாய் ஒரு ரப்பர் வளையம் இருந்தது... ஒன்று சிவப்பு பச்சை, மற்றது மஞ்சள் பச்சை இன்னும் சிலவும் இருந்தது.... இவர்கள் ஏன் இதை அணிய வேண்டும் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்... சாதி இல்லை என்று நான் சொல்லியபோதும் என் மனம் என் பேச்சைக் கேக்காமல் என் சாதியின் வளையம் எப்படி இருக்கும் .... அப்டி ஒன்று இருக்குமா ?? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தது... என்ன செய்வது இன்னும் 1 மணி நேரம் பயணம் உள்ளதே....
பயணி ஒருவர் உரத்த குரலில் "யோவ் பாட்ட போடுங்கைய". எந்த பதிலும் வரவில்லையே .. என்று நான் எண்ணி முடிப்பதற்குள் அதிசப்தமாய் "மானம் இடி இடிக்க மத்தளங்கள்" என்று ஒலி பெருக்கி கத்த தொடங்கியது... அருமையான பாடல் தான் .. ஆனாலும் அதிக சத்தம் காதைப் பிளந்தது... என் மனம் அறிந்தவராய் ஓட்டுனர் சரியான அளவில் சத்தத்தை வைத்தார்... அப்பாடி என்று தலையை சாய்த்தேன்.. தூக்கம் வரவில்லை ...
ஒவ்வொருவராக கவனிக்க ஆரம்பித்தேன் .... அப்போது ஒரு அதிசயத்தைக் கண்டேன்... மஞ்சள் பச்சை வளையல்காரன் பேருந்தின் மேல் கூரையில் பாடலின் இசை ஏற்ப மன்னிக்கவும் தாறுமாறாக தட்டி கொண்டிருந்தான்... என் கைகளும் துடித்தன . இளையராஜா இசைக்கு சுதி சேர்க்க வேண்டும் என்று . ஆனால் அந்தோ பரிதாபம் மாணவிகளின் புத்தகப் பைகள் என் கைகளைக் கட்டிப் போட்டது.... இன்னொரு பச்சை சிவப்பு வளையல்காரன் கம்பிகளில் தன் இசை அறிவைக் காட்டிக் கொண்டிருந்தான்.. கம்பிகளையும் தொட முடியாமல் மேற்கூரையையும் எட்ட முடியாத கருப்பு வெள்ளை வளையல்காரன் தன் கையில் இருந்த நோட்டைக் கொண்டு இசை மீட்டினான்..... யாவும் சேர்த்து சகிக்க முடியாத வாறு காதை பஞ்சர் ஆக்கி கொண்டிருந்தது...
எனினும் சாதியால் பிளவு பட்டவர்கள் இளையராஜா இசைக்கு சுதி சேர்கவாது ஒன்றினைதார்களே என்று எண்ணிய படி கண்களை மூட நடத்துனர் கத்தினார் "புதுக்கோட்டை புதுக்கோட்டை ....."

நாள் : 7-Feb-15, 12:27 pm

மேலே