எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மாதா பிதா குரு தெய்வம்" முதலிரண்டில் இருப்பவர்களுக்குக் கொடுக்காத...

"மாதா பிதா குரு தெய்வம்"

முதலிரண்டில் இருப்பவர்களுக்குக் கொடுக்காத மரியாதையை அடுத்திரண்டில் இருப்பவருக்கு கொடுப்பது சாலச் சிறந்ததோ ?
அது ஏற்புடையதா ? புரியவில்லை எனக்கு. பணம் பத்தும் செய்யும் என்றார்கள். இங்கே கோடி அல்லவா செய்கிறது ? வெற்று காகிதம் அன்னையின் உதிரத்திற்கு ஈடாகுமா ? இல்லை தந்தையின் வியர்வைக்கு ஈடாகுமா ? முன்பெல்லாம் மிட்டாய் வாங்கக்கூட பணம் கேட்கும் பிள்ளைகள் , இன்று தானே சம்பாதிக்கத் தொடங்கியப்பின் பெற்றோர்களை கேட்டா அனைத்தையும் செய்கிறார்கள் ?
மிட்டாய் என்ன ? மின்சாரத்தையே வாங்கிவிடுவார்கள் போலும். " நான் ஏன் செய்ய வேண்டும் ? " என்று கேட்கும் பிள்ளைகளே, உங்கள் காதுகளை இங்கே கொடுங்கள் . அதே போல் பெற்றோர் நினைத்திருந்தால் நீ இன்று வாழ்ந்திருக்கவே மாட்டாய் ! அடிப்படையிலிருந்து அவசியம் , ஆசை என எல்லாவற்றிக்கும் பணத்தை வாரி வாரி கொடுத்து வளர்த்தது எதற்கு ? நெஞ்சில் ஏறி மிதிக்கவா ? போங்கடா .. ஒருவேளை அன்று உன்னை விட்டு போயிருந்தா " என் பெத்தவங்க என்னை கவனிக்கல , எனக்கு அவங்களை பிடிக்கல , என்னை வளர்கல , பாசம் இல்ல " , இப்படி எல்லாம் ஊர் முழுக்கச் சொல்லுவிங்கடா. எந்த பெத்தவங்களாவது, இப்படி போய்ச் சொல்லுகிறார்களா? படித்து பட்டம் வாங்கிய முட்டாள்கள் தான் இப்படி கூறித் திரிகிறார்கள். ஆங்கிலம் பேசி, மேல்நாட்டு உடை உடுத்தினால் நீ உலக்கத்தையே வாங்கிவிட்டாயா என்ன? அப்படி என்ன சாதித்து விட்டாய் ? நீ கீழே விழுந்தால் உன்னை தூக்கி விட்டது பெத்தவங்களா ? பணமா ?
நல்லா யோசிங்க. பொதுநலமா நடந்துக்கிற பெத்தவங்கக்கிட்ட ஏன்டா சுயநலமா நடந்துக்கிறீங்க ? அநாதை ஆசிரமத்திலே பிள்ளைகள் இருக்காங்க, முதியோர் இல்லத்தில் முதியவங்க இருக்காங்கதான். ஆனால் , பிள்ளைகள் கூட இருந்தும் பெத்தவங்க அநாதையா தான்யா இருக்காங்க, மனதளவில் . அநியாயத்தை நியாயமாக்காதீங்க...........

- ஜனனி ராஜாராம் -

நாள் : 7-Feb-15, 12:02 pm

மேலே