எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 15ஆம் தேதி இடம்பெறவிருக்கின்ற கவனயீர்ப்புப்...

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 15ஆம் தேதி இடம்பெறவிருக்கின்ற கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பிலும்,அதன் ஏற்பாடுகள் தொடர்பிலும் சில விடயங்களை ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர்.

1.நிகழ்வு முற்றும் முழுதான அமைதிவழியமைந்த,எமது உரிமை தொடர்பிலான அறப்போராட்டம்.அதனால் முடிந்தளவு அமைதியான வழியில் இதனை நடாத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்,அதற்கு உங்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகிறது.

2.நிகழ்வுக்கு வரவிருப்பவர்களிடமிருந்து எவ்விதமான பதாதைகளையும் நாம் எதிர்பார்க்கவில்லை.எமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகள் அன்றைய தினம் ஏற்பாட்டாளர்களாலும்,நெறிப்படுத்துனர்களாலும் வழங்கப்படும்.

3.அன்றைய தினம் எந்தெந்த கோரிக்கைகளை முன்வைக்கப் போகின்றோம் என்பதை வெகுவிரைவில் பொதுவில் முன்வைப்போம்.

4.கலந்துகொள்பவர்கள் வெள்ளை அல்லது கறுப்பு நிற ஆடைகள் அணிந்துவருவதை ஊக்குவிக்கும் அதேசமயம்,அது இயலாதவர்கள் இதைக் காரணம் காட்டி நின்றுவிடாமல் கட்டாயம் சமூகமளிக்க கேட்டுக்கொள்கிறோம்.

5.இந்த நிகழ்வு தொடர்பில் அறிவுறுத்தும்,அறியத்தரும் ஊடக அறிக்கைகள் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டிருக்கின்றன.அவற்றை சீக்கிரமே உங்கள் அபிமான ஊடகங்களில் காணலாம்.இங்கும் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.

6.தீர்வை எதிர்பார்த்து எமது கோரிக்கைகள் மும்மொழியிலும் தயாரிக்கப்பட்டு பங்குபற்றுவோரின் கையொப்பம் பெறப்படும்.அதன்பின் அதன் மூலப்பிரதியை சனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம்.கூடவே அதன் பிரதிகள் முறையே இப்பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

7.இதில் பங்குபற்றுவதற்கு யாருக்கும் தயக்கம்வேண்டாம். முக்கியமாக பெண்களுக்கு.எப்படியும் குறைந்தது 100-150 பெண்களை நிகழ்விற்கு எதிர்பார்ப்பதால் பயமின்றி உங்கள் நண்பிகளுடன் இணைந்து இந்த கவனயீர்ப்பிற்கு ஒன்றுசேர்வீகளென எதிர்பார்க்கிறோம்.

8.வகுப்புகள்,வேலைகள் என்று ஒவ்வொரு காரணம் கூறி எமது ஒன்றிணைப்பிலிருந்து விலகிச்செல்லாது முடியுமானவரை கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள்.இது எங்களின் தண்ணீர் தொடர்பிலான பொதுப்பிரச்சனை.இதில் இன,மத,பிரதேசவாதங்கள் கலப்பதை ஏற்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

இதுதொடர்பிலான மேலதிக மற்றும் பூரண விடயங்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் எம்மால் அறியத்தரப்படும்.உங்களிடம் எதிர்பார்ப்பது இது தொடர்பிலான விழிப்புணர்வை அதிகப்படுத்துதலும்,நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுதலுமாகும்.

நன்றி-ஏற்பாட்டாளர்கள்.


via Mynthan Shiva @குடிநீருக்கான உரிமையை பாதுகாப்போம்

நாள் : 12-Feb-15, 7:05 am

மேலே