எப்போதாவதும்அவ்வப்போதும்-----அகன் வானம் அவ்வப்போது எழுதும் சிறுகதை மழை எப்போதாவது...
எப்போதாவதும்அவ்வப்போதும்-----அகன்
வானம்
அவ்வப்போது எழுதும் சிறுகதை
மழை
எப்போதாவது
புயல்...
காடு
அவ்வப்போது படைக்கும் கவிதை
மலர்
எப்போதாவது காப்பியம்
காட்டுத் தீ ...
கடல்
அவ்வப்போது வரையும் கோடுகள்
அலைகள்
எப்போதாவது ஓவியம்
சுனாமி.....
எழுத்து
அவ்வப்போது வாழ்வது
சொற்களில்
எப்போதாவது பெருவாழ்வு
கவிதைகளில்