எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓர் ஓலை ஒரு வேளை எனக்கு விரைவில்----அகன் இல்லாமற்போன...

ஓர் ஓலை ஒரு வேளை எனக்கு விரைவில்----அகன்



இல்லாமற்போன மனை வீடு
வயல் வரப்பு வாங்கியாக வேண்டும்.....

மனைவியுடன்
சரியான புரிதலோடு புரிய வேண்டும்
ஒரு திருமணம்
அறுபதுகளில்....

மகனுக்கு ஒரு மனையாள்
தேட வேண்டும்...
கூடவே அவன் பிள்ளைக்கு
ஒரு பள்ளியும் தேடி வைக்க வேண்டும்....

மொய்களுக்கு மறுமொய்
மெய்யாய் சென்றளித்து
வாழ்த்தி வர வேண்டும்...

நல்ல வேட்பாளரைத் தேர்தெடுக்க
வாக்களிக்க வேண்டும்...

வியர்வை பொழியும் தோழர்களுக்கு
பரிவோடு பரிசும் பட்டங்களும்
உயர் வாழ்வளிக்க வேண்டும் .

நட்புக்கு கைகுலுக்கலும்
பகைமைக்கு மன்னிப்பும்
பூக்களோடு ஓர் உலாவும்
பட்டாம் பூச்சிகளோடு
முத்தப் பரிமாற்றங்களும்
மழை நீரில் நீள் குளியலும்.......

இப்படி இன்னும் எத்தனையோ
எனக்கு என் வாழ்வின் மீதங்களாய் ...
ஒரு வேளை ஓர் ஓலை நாளையே
உருவாகி வருமாம்-மருத்துவர் உரை இது!!

வரட்டும்...
அதற்குள் ஒரு கவிதை எழுதி
அந்தக் குழந்தையிடம் கொடுத்திட வேண்டும்
அதையே கவிதையெனக் கொண்டு...!!!

பதிவு : agan
நாள் : 12-Feb-15, 8:06 am

மேலே