"- என்னை எல்லோரும் வெறுப்பதும் , உன்னை எவரும்...
"- என்னை எல்லோரும்
வெறுப்பதும் ,
உன்னை எவரும் விரும்புவதும் ஏன் -"
இறப்பு வினவியது பிறப்பிடம்....!!
"- நான் சேர்க்கையின் சினேகிதன்
அழகான பொய்யன்
நீ பிரிவின் பிரம்மா
அழகற்ற உண்மை "- என்றது பிறப்பு...!!
இருவரும் ஒன்றை மறந்தனர் -
பிறப்பும் இறப்பும்
ஓட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.!
இரு பக்கம் கொண்ட ஒரு நாணயம்...!!
"- சிரிக்கவைத்து வந்த நான்
ஏன்
அழவைத்து இறக்க வேண்டும்..?"-கேட்டேன்.
பதில் வந்தது இப்படி..
"- உன் கவிதைகளால் சிந்திக்க வை
அது நீ வாழ்வதற்கு சமம்...!"-
இதோ நான் கவிதை எழுத
எழுத்துக்களோடு ஒப்பந்தம் போட
மொழியை யாசிக்க துவங்குகிறேன்..