எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடையாய் தாருங்கள் ஒரு கவிதை ...(ஒரு வினாவுக்கு விடையாய்...

விடையாய் தாருங்கள் ஒரு கவிதை ...(ஒரு வினாவுக்கு விடையாய் 4வரிகள் மட்டும் )

முதலும் முடிவும்

எரியும் மெழுகுவர்த்தி
ஒளிரும் திரியை
வெளிச்சத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்குமா...?

வந்தமரும் வண்டுகளுக்கு
மலரிதழ்கள்
வேரின் விவரங்களை விவரித்திருக்குமா...?

ஒளிரும் சிற்பம்
தனக்கு உளி தந்த
வலியை உலகுக்கு உரைத்திருக்குமா...?

அலையும் கடல்
தனது முயற்சி முனைப்புகளை
கரையிடம் கதைத்திருக்குமா...?

அர்த்தங்கள் அற்ற வரிகளில்
சிக்கித்தவிக்கும் எழுத்துக்கள்
தனது அழுகையை கவிதையிடம்
சொல்லியிருக்குமா...?

மனிதம் அற்ற மனிதர்களைத்
தாங்கும் பூமி
தனது சினத்தை எதனுடனாவது
எடுத்துரைத்திருக்குமா...?

பதிவு : agan
நாள் : 13-Feb-15, 6:03 pm

மேலே