எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களே..... வணக்கம்..... நான் யாரோ நீங்கள் யாரோ.... இவர்...

தோழர்களே.....

வணக்கம்.....

நான் யாரோ நீங்கள் யாரோ.... இவர் யாரோ..... அவர் யாரோ..... ஆனால் நாம் அனைவருமே ஒரு புள்ளியில் இணைந்து கிடக்கிறோம்,....... அது எழுத்து..... நிஜமாகவே எழுதுபவன் நிம்மதியாக இருப்பதில்லை.... அவன் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறான்...... அவனை தொலைக்கவே முயற்சிக்கிறான்...... ஆழ் மனதில் ஒரு சொட்டு அழுகை எப்போதும் தயாராக இருந்து கொண்டே இருக்கிறது.... அது தீரா தேடலின் கடவுளின் உருவத்தையே கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்.... நமக்குள் எத்தனையோ கருத்து மோதல்கள்.. வேறுபாடுகள்..... இருந்தாலும்..... ஒரு நபர் தொடர்ந்து தளத்துக்கு வரவில்லை என்றால் உள்ளுக்குள் ஒரு தேடல் வருவதை தவிர்க்க முடியவில்லை..... இல்லையா.... அது தான் எழுதுபவனின் உண்மையான அகம்..... முகமூடி வேறு வேறாக போட்டுக் கொள்வதில் அவன் காலத்தின் சாயல் இருக்கும்..... ஆனால்.... உள்ளுக்குள் அவன் எழுத்தைப் போலவே அவன் அனைவரையுமே நேசிக்கிறான்..... நேசிப்பு இல்லாதவனிடம்... எழுத்து வரவே வராது என்பது என் திண்ணம்.... திடீரென தோன்றியதை பகிர்கிறேன்..... அவ்வளவே..... இது நடந்தே தீர வேண்டும் என்றில்லை...... ஏன் நாம் அனைவரும் ஒரு நாள் ஒரு ஞாயிறு முழுக்க ஒரு இடத்தில் சந்தித்து பேசி அரட்டை அடித்து.. பகிர்ந்து, சண்டையிட்டு இன்னும் ஆழமான ஒரு நட்பை தொடரக் கூடாது.....(வர முடிந்தவர்கள் வரட்டுமே) யோசியுங்கள்..... நாள் இடம்.... எதுவும் இப்போதைக்கு என் மனதில் இல்லை.... இது ஒரு விதை.... போட்டு விட்டேன்.. எப்போது மரமாக ஆகிறதோ அன்று இது நடக்கும்..... முகம் தெரியா எத்தனை உறவுகளை இந்த தளம் தந்திருக்கிறது.....இந்த உலகில் நாம் சம்பாரிப்பது உறவுகளை மட்டும் தான்.... அதைத் தாண்டிய எதுவுமே சுவடுகள் அற்றவை.....

நான் சுவடுகள் தேடுகிறேன்.....

நன்றியுடன்....

கவிஜி

பதிவு : கவிஜி
நாள் : 15-Feb-15, 6:55 pm

மேலே