எதையும் எடுத்தும் வரவில்லை வரும் பொழுது : உதறி...
எதையும் எடுத்தும் வரவில்லை
வரும் பொழுது :
உதறி செல்கிறது உயிர் நம்மை
நம்முடன் வந்த அது .. ...
எதையும் எடுத்து வரவில்லை என்றாலும்
நினைவுகள் வகையாய் நம்முள்ளே ....
நினைவுகளில் உயிருள்ளவை
உயிரற்றவை என்பதெல்லாம்
போகும் போது
அறிய வாய்ப்பில்லை .....
"இரு ..இரு ...வருகிறேன்
இருவரிடம் ஒரு கைகுலுக்கல்
சிறு புன்னகை அளித்து ...."
உயிர் மொழிந்தது
"கொடு ...கொடு ...
நீ இல்லாத தருணங்களில்
அவர்களுக்காக எதற்கு
மறைந்து போகும்
புன்னகையும் கைகுலுக்கலும்
ஒரு கவிதை எழுதி கொடுத்து வா
காத்திருக்கிறேன் ...""
கதறும் சுற்றத்திடம் வயசாளி இப்படி சொல்கிறார் ,
"ஏம்லா ,
இப்படி பித்துக்குளி கணக்கா அலையுதீக ?
ஏக்கச் சூடு அடங்க பால் ஊத்துங்கலே ...."
நான் கவிதை எழுத விரல் நீட்டுகிறேன் .....
யைச் சிந்தி " .