எம் தலைவர் சேர்ந்தே போராடுவோம் என்றார் மற்ற இயக்கங்களை...
எம் தலைவர்
சேர்ந்தே போராடுவோம் என்றார்
மற்ற இயக்கங்களை அழைத்து.
இப்போது அவர் எம் ஜனாதிபதி .
அவருக்கு முன் இறந்தவர்கள்
அமைச்சர்களாய் இருக்கிறார்கள் .
நாங்கள் எங்களுக்கான
தனி நாட்டில்
இப்போது நிம்மதியாய் ....
--- கவிஜி அவர்களின் வரலாற்று யாத்திரை உந்த வந்த சிந்தனை . அவ்வளவே .
நல்ல முன்னெடுப்பு இந்த வரலாற்று யாத்திரை .நானும் முயற்சிப்பேன் ஒரு நிகழ்வோடு .பார்ப்போம் .