எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-- உடல் விற்பனைக்கு -- வங்கக் கடற்கரை வந்து...

-- உடல் விற்பனைக்கு --

வங்கக் கடற்கரை
வந்து இறங்கிய
உல்லாசக் கப்பல்
உள்ளெங்கும் அழகிகள்

வந்த நாடறியா
விலைபேச வந்த
வியாபாரிகள்
வியாபார நிறுவனங்கள்

நிறம் சதை
நாடு நோய்
வயது வாரியாக
பிரிவு இருக்க

வரவேற்ற வண்ணம்
ஏலம் ஆரம்பிக்க
ஆடை இழந்தே
அழகிகள் நடக்க

கோமணம் களைய
லட்சம் தொடங்கி
கோடிகள் முடிய
முடிந்தது ஏலம்

ஆளுக்கொரு வண்டியில்
அள்ளிக் கொண்டு
திசை எட்டும்
பறந்து செல்ல

அன்று இரவே
இனிதே ஆரம்பமாயிற்று
உடல் விற்பனை
உள்ளூர் எங்கும்

வாங்கிய விலையை
விரைவில் சேர்க்க
தெருத் தெருவாய்
அவிழ்க்கப் பட்டது

அழகிகள் உடையும்
விபச்சாரமும்
ஆண்கள் கூட்டம்
நிறைந்து வழிய

பைகள் எல்லாம்
நிறைந்து வழிய
பல் இளித்தது
பல நோய்கள்

சென்றவர் எல்லாம்
நோயுடன் திரும்ப
கல்லாக் கட்டியது
மருத்துவ மனைகள்

சேதி கேட்டு
கையூட்டு வாங்கி
கறாராய் கணக்கு
தீர்த்தது அரசு

அவனின் நோய்கள்
மனைவிக்கு மாற
பிறந்த பிள்ளையும்
ஏற்றே வந்தது

முதல் சாவு
அவனது
இரண்டாம் சாவு
மீதம் இரண்டினது

இரண்டாம் கப்பல்
வந்து இறங்கியாயிற்று
மீண்டும் தொடங்கியது
உடல் ஏலம்

-- கற்குவேல் .பா .
http://eluthu.com/kavithai/233591.html

நாள் : 24-Feb-15, 2:20 pm

மேலே