"யுகம் தாண்டும் சிறகுகள் "- 'கவிஜி ' பறக்கவிடுகிறார்...
"யுகம் தாண்டும் சிறகுகள் "- 'கவிஜி ' பறக்கவிடுகிறார்
*****************
நண்பர்களே,
எழுத்தின் தளத்திலிருந்து இவை விரிகின்றன...
'உலா வரும் உருவகங்கள் ' என்ற எமது எண்ணத்தின் கருத்து பரிமாற்றங்களில் உருவானதே இந்தச் சிறகுகள்.
தளத்தின் அபூர்வமான கவிதைகள் பலவும், பிறவும் , விமர்சன/ சுயவிமர்சனப் பார்வையில் அலசப்பட்டு உலகளாவிய ஊர்வலம் வரவிருக்கின்றன.
மிகச்சிறந்த படைப்பாளிகள் சிலர் இந்தச் சிறகுகளை ஒரு தொடராக பறக்கவிடுகிறார்கள்....முன்னோடிக் கவிஞர்கள் சிலரும் இந்த ஊர்வலத்தில் சேர்ந்துகொள்வார்கள் ...
முத்தான முதல் பொற்சிறகை
சத்தானக் கவிஞன்
'கவிஜி' விரிக்கிறார்
இந்தக் கவித்தொடர் ஓர் அழகிய நூலாக வெளிவரும்..... அந்த நூலின் தீராத பக்கங்கள் "யுகங்கள் கடந்து வாழும் சிறகுகளாலானவை.
உங்கள் வானை
விரித்தே வையுங்கள்
ஊர்வலம் வருவது
உங்களின் சிறகுகளே ....
-நேசத்துடன்
கவித்தாசபாபதி