பத்துப் பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது...
பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாகிட முடியாது :
பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது :
பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள் .
-மகாகவி ஈரோடு தமிழன்பன்