எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருமணம் என்னும் ஒர் வழி பயணத்தில் திருப்பங்கள் நூறு...

திருமணம் என்னும் ஒர் வழி பயணத்தில்
திருப்பங்கள் நூறு வந்து போகலாம்..
தன்னடக்கமாய் நேர்வழி நடந்தால்
தகர்ந்திடாது இல்லற இன்பம்...!
முப்பது அறுபதில் அடங்கி போகலாம்
ஆசையும் மோகமும் அரைகுறையாய்...
அதையும் தாண்டி அனுபவத்தில் இருக்கிறது
ஆயிரம் ஆயிரம் வாழ்க்கை தடங்கள்..!
இயல்பாய் தெரியும் வாழ்க்கையில்
இன்னல்கள் வீசிபோக வெற்றிடம் அதிகமாகும்
அதை நிரப்பிட எண்ணங்கள் தட்டிதடுமாறிடும்
அன்று தான் மனம் நட்பை தேடி அலைந்திடும்...!
உறவுகளை இழக்கும் இடம் ரணமானாலும்
புது உறவுகள் முளைக்கும் இடம் விழித்தேயிரு...
ஒருவனுக்கு உன் அந்தரங்கம் தெரிந்தால்
அவனும் உன்னை அடிமையாக்கும் எதிரியாவான்..!
...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 6-Mar-15, 9:04 pm

மேலே