பகுத்தறிவின் ஆர்வத்தினால் கோயிலுக்கே சென்றாலும் என்னை பெற்றெடுத்த அன்னையை...
பகுத்தறிவின் ஆர்வத்தினால்
கோயிலுக்கே சென்றாலும்
என்னை பெற்றெடுத்த
அன்னையை தவிர வேறு எவரையும்
தெய்வமாய் நான் வணங்குவதில்லை .
சிறுவயது முதல் பருவவயது
கடந்து முடிந்த வரை....
குறும்புக்கும் ஆசைக்கும்
நான் விளையாடும் ஒரே
உயிருள்ள தேவதை பொம்மைகள்........
என் செல்ல தங்கைகள்..!
சில மதிப்புமிக்க அக்காக்கள் !
ஆயிரம் ஆண் நட்பிருந்தாலும்
செல்ல அதட்டலும்
பிரமாண்ட நட்பும்
துயரம் கொண்ட போதெல்லாம்
தன் தோளை ஆறுதல் மேடையாக்கும்
அற்புதமானவள் அவள்
என் தோழி.
கற்பனைக்குள் தான் இன்னும் கூட
வட்டமடித்துக்கொண்டிருக்கிறாள்
இதயத்திற்குள் வந்து வந்து
செல்லும் ஒவ்வொரு தருணத்திலும்
ஒவ்வொரு பெயராக மாறுகிறது.
காதல் என்ற பெயரில்
காதலியின் புனித அன்பு.
இவ்வாறாக
தாயாக.. சகோதரியாக,
தோழியாக, காதலியாக..
வரப்போகும் மகளாக என
யாவரும் ஒரு புள்ளியில்
”பெண்மை” என பெருமையாகிறார்கள்.
பெண்மையினை போற்றுவோம்.!!
தளத்தில் அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என பெண் பாரதிகளாக வீற்றிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நாளைய
மகளிர் தினத்திற்கு இன்றே வாழ்த்துக்களை பதிவு செய்து மகிழ்கிறேன்.
-இரா.சந்தோஷ் குமார்.