எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிமையான ஒரு பாடல் ஆண் : பேசும் யாழே...

இனிமையான ஒரு பாடல்



ஆண் :
பேசும் யாழே பெண் மானே
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீ தானே
வீசும் தென்றல் நீ தானே
பேசும் யாழே பெண் மானே

--- சரணம் - 1---

பெண்:
நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ...ஓ...
வானே தன்னை மறந்த
நிலவினைப் புகழ்ந்திடலாமோ

ஆண் :

எழிலே தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே
எழிலே தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே

பெண்:
இன்ப மொழிப் பேசி பேசி
அன்புப் பார்வை வீசி வீசி
இன்ப மொழிப் பேசி பேசி
அன்புப் பார்வை வீசி வீசி

ஆண் :
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீ தானே
பேசும் யாழே பெண் மானே...

---- சரணம் - 2-----

பெண்:
யாழே நானென்றால் நாதம் (இசை)
யாழே நானென்றால் நாதம் நீர்தானே
யாழே நானென்றால் நாதம் நீர்தானே

ஆண் :
நாதத்தில் பேதம் உண்டு
நமக்கது வேண்டாமே
நாதத்தில் பேதம் உண்டு
நமக்கது வேண்டாமே

ஆண் :
காதல் வாழ்வே கனி ரசமே

இருவர்:
காதல் வாழ்வே கனி ரசமே
மாதர் மறவர் உல்லாசமே
காதல் வாழ்வே கனி ரசமே





** இந்த பாடலின் சிறப்பம்சம்:

=> M.G. இராமசந்தர் என்ற பெயரில் மக்கள் திலகம் M.G.R. மற்றும் இவரின் மனைவி V.N.ஜானகி நடித்த இந்த பாடலை எழுதியவர் கலைஞர்.மு.கருணாநிதி.
=> இந்த பாடலுக்கு இசையமைத்த C.S. ஜெயராமன் அவர்களின் தங்கைதான் கலைஞரின் முதல் மனைவி.
=> பாடலை பாடியவர்கள் : AM ராஜா, மற்றும் இவரின் மனைவி ஜிக்கி.
=> பாடல் இடம்பெற்ற திரைப்படம் : நாம் ( 1953)

------------------------------
எம்.ஜி.ஆருக்கும் மூன்று மனைவிகள்.
கலைஞருக்கும் மூன்று மனைவிகள் .

-------------------
-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 7-Mar-15, 6:50 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே