ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்! புதிய தலைமுறை...
ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்!
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
-பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச்செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)