மரணம் ஒரு இளைஞனிடம் கூறியது இன்று உன் கடைசி...
மரணம் ஒரு இளைஞனிடம் கூறியது இன்று உன் கடைசி நாள் என !!! அதற்க்கு அந்த இளைஞன் கூறினான் நான் தயாராக இல்லை என . உடனே மரணம் கூறியது பட்டியலில் உன் பெயர் தான் முதலில் உள்ளது என .
உடனே இளைஞன் மரணத்திடம் கூறினான் வா நாம் இருவரும் காபி சாப்பிடலாம் என !
மரணம் அதற்க்கு ஒத்து கொண்டது .
இளைஞன் காப்பியில் தூக்க மருந்தை கலந்து மரணத்திடம் கொடுத்தான் . அதை சாப்பிட்டு விட்டு மரணம் நன்றாக தூங்கி விட்டது .
மரணம் உறங்க தொடங்கிய பின் இளைஞன் பட்டியலை எடுத்து தன பெயரை கடைசியில் எழுதி விட்டான்.
ஆழ்ந்த உறக்கத்தின் பின் எழுந்த மரணம் கூறியது
நீ என்னிடம் மிகவும் அன்பாக இருந்தாய். அதனால் நான் என் பட்டியலை கடைசியிலிருந்து ஆரம்பிக்க போகின்றேன் என !
கருத்து : தலை எழுத்தை மாற்ற முடியாது. நீ எவ்வளவு முயற்சித்தாலும்!!!!.