காலை வணக்கம் தோழர்களே........... ---------------------------------------------------------------------------------------------------------- மனைவியும் ஒன்னே கால்...
காலை வணக்கம் தோழர்களே...........
----------------------------------------------------------------------------------------------------------
மனைவியும் ஒன்னே கால் வயது மகனும் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.காலை எழுந்து கடைக்குச் சென்று டீ குடித்து விட்டு வந்து அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தேன்.
டீ க்கடையில் கேட்ட பாடலால் அல்லது எதிர்பட்ட ஒருவரின் புன்னகையால் அல்லது பேப்பரில் படித்த ஒரு செய்தித் துணுக்கால் அல்லது ஏதோ ஒரு பழைய நினைவின் பின்னலாய் எனக்குள் தொற்றிக்கொண்ட ஒரு வகையான இன்பத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
துண்டு எடுக்கும் போதும்,மாற்றுத் துணி எடுக்கும்போதும்,பாத்ரூம் சென்றுவிட்டு மறந்துபோன சாம்பூ எடுக்க திரும்பவும் வெளிவரும்போதும், வெளியேறி மேக்கப்(?) போடும்போதும் எனக்குள் இருந்த சிறு நடனத்தையும் துள்ளலையும் எதேச்சையாகக் கவனிக்க ஒரு வினாடி ஆச்சர்யம்ம்ம்ம்ம்.....
பல ஆண்டுகளுக்குப் பின் என்னை நான் கவனித்தேன்.கவனிக்கிறேன்.
என் அசைவுகளில் நிறைந்திருக்கிறது என் மகனின் சாயல்....
#நினைவுகளின் முரண்......
-சர் நா.......